2026 சட்டப்பேரவை தேர்தலில் தவெக, திமுக இடையே தான் போட்டி - விஜய் பேச்சு!

உங்க ஆட்சிய பத்தி கேள்வி கேட்டா மட்டும் ஏன் சார் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருது? என விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
தவெக பொதுக்குழுவில் விஜய் பேசியதாவது: நாம் புதிய வரலாற்றை படைக்க தயாராக வேண்டும். ஒரே குடும்பம் தமிழகத்தை சுரண்டி வாழ்வது அரசியலா? மாநாடு முதல் பொதுக்குழு கூட்டம் வரை ஏராளமான தடைகள். மக்கள் பிரச்சினைகளை மடை மாற்றி மக்கள் விரோத ஆட்சியை, மன்னர் ஆட்சி போன்று நடத்தி வருகிறார்கள். நானும் அடி அடினு அடிக்கனுமா? யோசிக்கிறேன். மத்திய அரசுக்கு கொஞ்சமும் குறைவில்லாத பாசிச ஆட்சி தமிழகத்திலும் நடைபெறுகிறது. அணை போட்டு ஆற்றை தடுக்கலாம், காற்றை தடுக்க முடியாது. ஒரே குடும்பம் தமிழகத்தை சுரண்டி வாழ்வது அரசியலா?
மாநாடு முதல் பொதுக்குழு கூட்டம் வரை ஏராளமான தடைகள் சொல்ல முடியாத அளவிற்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள். உங்க ஆட்சிய பத்தி கேள்வி கேட்டா மட்டும் ஏன் சார் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருது? 2026 சட்டப்பேரவை தேர்தலில் தவெக, திமுக இடையே தான் போட்டி. தவெக ஆட்சியில் அதிகார பகிர்வு, பெண்கள் பாதுகாப்பு 100% உறுதி செய்யப்படும். புதிய வரலாற்றை படைக்க தயாராக வேண்டும் என கூறினார்.