மாணவர்கள் மத்தியில் பேசுகிறார் விஜய்

 
ff

ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் உரையாற்றுகிறார் த.வெ.க. தலைவர் விஜய்.

 

gg

தமிழக வெற்றிக் கழகம் சார்பில், நடிகர் விஜய் இன்று இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்குகிறார். சென்னை திருவான்மியூரில் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு அதிகாலையே விஜய் வருகை புரிந்துள்ளார்.  இந்த நிகழ்ச்சியில் 19 மாவட்ட மாணவர்களுக்கு விருது வழங்குகிறார் விஜய்.725 மாணவர்கள் உட்பட 3,500 பேர் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. த.வெ.க. நிர்வாகிகள் மாணவர்கள், பெற்றோரை பேருந்துகள் மூலம் அழைத்து வந்துள்ளனர். 

vijay

 

இந்நிலையில் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வில் த.வெ.க. தலைவர் விஜய் இன்று உரையாற்றுகிறார். 2ஆம் கட்ட நிகழ்வில் பேசமாட்டேன் என விஜய் அன்று கூறிய நிலையில் திடீர் ட்விஸ்டாக இன்று பேசுகிறார். மாணவர்கள் மத்தியில் த.வெ.க. தலைவர் விஜய் என்ன பேசப் போகிறார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.