"ஏற்கனவே நான் ஒரு CM... இனி PM..." - விஜய்யின் தாய் நெகிழ்ச்சி
தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சிக் கொடியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், கட்சியை பலப்படுத்தும் பணிகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினையும், கட்சியின் பாடலையும் இன்று (ஆகஸ்ட் 22) நடிகர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.
பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில், நிர்வாகிகள் முன்னிலையில் இன்று காலை 9.25 மணிக்கு கட்சிக் கொடியை அறிமுகம் செய்தார். இருபுறமும் யானை, வாகை மலருடன், சிவப்பு, மஞ்சள் நிறத்தில் கட்சிக்கொடி அமைந்துள்ளது. நடிகர் விஜய் இன்று தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடலை அறிமுகப்படுத்தும் நிலையில் நிகழ்ச்சிக்கு அவரது தந்தை சந்திரசேகர் மற்றும் தாயார் சோபா ஆகியோர் வருகை புரிந்தனர்.
இந்நிலையில் தனது மகனின் அரசியல் பிரவேசம் குறித்து பேசிய தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் அம்மா சோபா. “இப்போ போல எப்போதும் உண்மையா இரு விஜய். நாட்டுக்கே ராஜானாலும் எனக்கு பிள்ளை. தமிழ் மொழியின் பாரம்பரியம் போற்று, பெண்ணியம் காப்பாற்று, புரட்சிகர திட்டங்கள் தீட்டு. வானில் பறக்கும் உன் கொடி உன் அரசியல் வெற்றிக்கு இதுவே முதல் படி. ஏற்கனவே நான் ஒரு CM (Celebrity Mother) இனி நானும் ஒரு PM (Proud Mother)” என்றார்.
-