"விஜய் சார் முதல்வராவார்...கல்விக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார்" - மாணவன் சின்னத்துரை பேட்டி

நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் கல்வி விருது விழாவில் கலந்துகொண்ட நிலையில் நெல்லை மாவட்டத்தில் சாதிய கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை அருகே அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு வைர மோதிரம், வைர கம்மல் ஆகியவை வழங்கிய நடிகர் விஜய், அவர்களை குடும்பமாக வரவழைத்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
இந்நிலையில் நடிகரும், தவெக தலைவருமான விஜய்யிடம் பரிசு பெற்ற நாங்குநேரி மாணவன் சின்னத்துரை , விஜய் சாரை நேர்ல பார்த்தது ரொம்ப மகிழ்ச்சி. அவர் பக்கத்துல வந்து உட்கார்ந்து இருந்தார்.
இவ்வளவு பெரிய ஆள் நம் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிறார் என்பதை எனக்கு பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. 2026ல் விஜய் சார் முதல்வராவார் என்ற நம்பிக்கை இருக்கு. அவர் முதலமைச்சர் ஆன பிறகு கல்விக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.