கலக்கப்போவது யாரு புகழ் ராமர் நடித்துள்ள படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி..!

 
1 1

'கேபிஒய்' ராமர் தனது இயல்பான காமெடி டைமிங், யதார்த்தமான நடிப்பு, மற்றும் எளிமையான தோற்றம் ஆகியவற்றால் இவர் ரசிகர்களின் மனதில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளார்.

இவர் டிவி நிகழ்ச்சி மட்டுமல்லாமல், "கோமாளி, சிக்ஸர், அப்பன் சுப்பன்" போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து தற்போது "சற்று நேரத்தில் தீர்ப்பு" என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.


டிபிகே பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தினை வேலன் எழுதி இயக்குகிறார். இந்த நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.