தெறிச்சு ஓடுறதா லீடர்?- விஜய்யை விமர்சித்த விஜய் சேதுபதி

 
ச்

விஜய் சேதுபதியின் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்துவருகின்றன. விஜய்யை விஜய் சேதுபதி மறைமுகமாக அட்டாக் செய்திருப்பதாக சோஷியல் மீடியாவில் கண்டங்கள் வலுத்துவருகின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பத்தாவது சீசன் தற்போது நடைபெற்றுவருகிறது.  இந்நிகழ்ச்சியை நடிகர் விஜய்சேதுபதிதான் இந்த முறையும் தொகுத்து வழங்குகிறார். மொத்தம் 19 போட்டியாளர்கள் இந்த சீசனில் விளையாடுவதற்கு பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கின்றனர். இதில் பிளாக் பாண்டி சில நாட்களுக்கு முன்பு திடீரென அவர் வீட்டை விட்டு வெளியேறினார். அவரது உடல்நிலை காரணத்தால்தான் வீட்டிலிருந்து வெளியேறியதாக தெரிவித்திருக்கிறார்கள். வீட்டின் தலைவராக ஷாத்திகா  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, “போட்டியாளர்கள் அனைவரிடமும் ஜனநாயகம் என்றால் என்ன? தலைவர் என்றால் யார்? என அவரவர் கருத்தை கேட்டார். மேலும், ஷாத்திகாவின் வாக்குறுதிகளையும் படித்து காண்பித்தார். லீடர்னா என்னன்னே தெரியாம, லீடர்ஷிப்புன்னா என்னன்னே தெரியாம, வாய்க்கு வந்த மாதிரி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துட்டு, பிரச்னைகளும்  பொறுப்பும் வரும்போது, எதிரணி மேல பழியைத் தூக்கிப் போட்டுட்டு, தெறிச்சு ஓடறது லீடருக்கான குவாலிட்டி இல்ல. அதுக்குப் பேரு ஏமாத்துவேலை” எனக் கூறினார்.

விஜய் சேதுபதியின் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்துவருகின்றன. விஜய்யை விஜய் சேதுபதி மறைமுகமாக அட்டாக் செய்திருப்பதாக சோஷியல் மீடியாவில் கண்டங்கள் வலுத்துவருகின்றன.