பட்ஜெட் தாக்கல் செய்ய தயாராகும் தவெக அரசு- 20 நாட்கள் விஜய் தொடர் ஆலோசனை

 
சட்டம், ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் விஜய் ஆலோசனை

ஜூலை 2 முதல் 22 வரை துறை ரீதியான ஆலோசனை கூட்டங்களை மேற்கொள்ள முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார்.


மிழ்நாடு முதல்வர் விஜய் தலைமையில் துறை ரீதியான ஆய்வுக்கூட்டம் வரும் ஜூலை இரண்டாம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பல்வேறு துறைகள் ரீதியாக அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன் விஜய் ஆலோசனை நடத்துகிறார். இக்கூட்டத்தில் துறை ரீதியாக சந்திக்கப்படும் சவால்கள் மற்றும் ஓராண்டு,மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டு திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படவிருக்கிறது. துறையில் வெளிப்படை தன்மையுடன் செயல்படுவதை மேம்படுத்துவது மற்றும் பொதுமக்களுக்கு விரைந்து சேவை வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது. அதன்பின் 2026- 27 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தயாரிப்பு பணிகளும் தொடங்கப்படவுள்ளன. இதனையடுத்து ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.