தவெக கூட்டத்தில் விஜய்-சங்கீதா போஸ்டர்

 
s

தஞ்சையில் நடைபெறும் தவெக நிர்வாகிகள் சந்திப்புக்கூட்டத்தில் விஜய்- சங்கீதா புகைப்படத்துடன் நின்ற ரசிகர்களின் செயல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

அ

நடிகர் விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சம்பவம், தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. விவாகரத்து கோரிய விஜய்யின் மனைவி சங்கீதா மீதான தவெக உறுப்பினர்களின் சமூக வலைதள தாக்குதல்களை கண்டிக்காத தவெக தலைவர் விஜய்ய்க்கு மாதர் சங்கம் கடும் கண்டங்களை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தஞ்சையில் நடைபெறும் தவெக நிர்வாகிகள் சந்திப்புக்கூட்டத்தில் விஜய்- சங்கீதா புகைப்படத்துடன் நின்ற ரசிகர்களின் செயல் இணையத்தில் வைரலாகிவருகிறது. விஜய் மீது சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், ரசிகர்களின் இந்த செயல் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.