தந்தையின் நடத்தை குழந்தைகளுக்கு அவமானம் ஏற்பட்டது- விஜய் மனைவி சங்கீதா

 
 ந்ன்ச்

செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் தவெக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் சங்கீதா அளித்துள்ள மனுவில், “விஜயின் திருமணத்தை மீறிய உறவு ஒரு துரோகம். விஜயுடன் இருந்த படத்தை நடிகை தொடர்ந்து பதிவிட்டார். என்னை அலட்சியப்படுத்தியதால்தான் தனித்து வாழ்கிறேன். வார்த்தைகளால் அலட்சியப்படுத்தியதால் தனித்து வாழ தள்ளப்பட்டேன். நடிகையுடனான உறவை முறித்துக் கொள்வதாக கூறினாலும், விஜய் அதையே தொடர்ந்தார். விஜய்யுடன் இருந்த புகைப்படங்களை நடிகை பகிர்ந்ததால் குடும்பத்திற்கு அவமானம். தந்தையின் நடத்தை குழந்தைகளுக்கு அவமானம் ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட நடிகையோடு விஜய் வெளிநாடுகளுக்கு சென்றார். வெளிநாடுகளுக்கு சென்றதையும் நடிகையே பகிர்ந்தார். பொதுவெளியில் நன்மதிப்பை கெடுக்கக்கூடாது என்பதால் நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை. திருமணத்தை மீறிய அந்த உறவை தட்டிக் கேட்டதால் வீட்டில் எனக்கான உரிமைகளை நிறுத்தி, கட்டுப்பாடுகளை ஏற்படுத்தினார் விஜய். கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தினார். விஜயின் நடத்தை காரணமாக சமூக வலைத்தளங்களில் எழுந்த சர்ச்சையால் மனரீதியான சித்திரவதை அனுபவித்தேன்.” என்றார்.