த.வெ.க. தேர்தல் பிரசாரப் பாடலை வெளியிட்ட விஜய்..!
Apr 2, 2026, 06:10 IST1775090404000
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு த.வெ.க. தேர்தல் பிரசார பாடலை அக்கட்சியின் தலைவர் விஜய் தற்போது வெளியிட்டுள்ளார். 'உங்க விஜய் நான் வரேன்! விசில் அடிக்க ரெடியா?' என்ற முழக்கத்தை முன்னிறுத்தி இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலில் 'மெரள போகுது ஸ்டேட்டு, எங்க விசிலு சத்தம் கேட்டு; நல்லவங்க வாழ நீ விசிலுக்கு அடி ஓட்டு' உள்ளிட்ட வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே வேட்புமனுத் தாக்கல் மற்றும் பிரசாரப் பணிகளில் வேகம் காட்டி வரும் விஜய், தற்போது பிரசாரப் பாடலையும் வெளியிட்டுள்ளதால் தவெக தேர்தல் களம் மேலும் விறுவிறுப்படைந்துள்ளது.
TVK ELECTION CAMPAIGN SONG -
— TVK Vijay (@TVKVijayHQ) April 1, 2026
உங்க விஜய் நா வரேன்!
Whistle அடிக்க ரெடியா?https://t.co/nVIKaba4w5 pic.twitter.com/p4UKBax6dQ

