கல்வி விருது - விழா நடைபெறும் இடத்திற்கு சென்றடைந்தார் விஜய்

 
vijay

தமிழக வெற்றிக்  கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு கல்வி விருது விழா, இன்று  மற்றும் ஜூலை 3 ஆகிய தேதிகளில்  இரண்டு கட்டங்களாக சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது.  முதற்கட்டமாக அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய  மாவட்டங்களில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா இன்று   நடைபெறுகிறது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட  மீதமுள்ள மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு ஜூலை மூன்றாம் தேதி கல்வி விருதுகள் விழா நடைபெறுகிறது.

vijay

இதில் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களோடு ஒன்றாக அழைத்து ஊக்கத்தொகை மற்றும் வெற்றி சான்றிதழ் வழங்கி கௌரவிக்க உள்ளார்.

vijay

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்படும் கல்வி விருது வழங்கும் விழா நடைபெறும் இடத்திற்கு சென்றடைந்தார் விஜய். போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும், நிகழ்ச்சியை விரைந்து முடிப்பதற்காகவும் அரங்கிற்கு முன்பாகவே சென்றுள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே 10 லிருந்து 15 நிமிடங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உரையாற்ற இருக்கிறார்.