ஒரே மேடையில் விஜய், ரஜினிகாந்த், மு.க. ஸ்டாலின்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்..!!

 
Q

அனிருத் - காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. இதில் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர்.

தமிழக முதலமைச்சர் விஜய்யும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனிருத் - காவியா மாறன் தம்பதிக்கு மலர்க்கொத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

இந்த வரவேற்பு விழாவின் போது, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முக ஸ்டாலினையும் முதல் அமைச்சர் விஜய் சந்தித்துள்ளார்.பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்ட பிறகு விஜய், ரஜினிகாந்த், ஸ்டாலின், கலாநிதி மாறன் ஒன்றாக புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.