#BREAKING விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் ஒத்திவைப்பு

 
விஜய் விஜய்

விஜயின் வேலூர் மக்கள் சந்திப்பு கூட்டம் பிப். 2வது வாரத்தில் நடக்கவிருந்த நிலையில், பிப்ரவரி இறுதி வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

vijay


வேலூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு வேலூர் அருகே 25 ஏக்கரில் இடம் உறுதியான நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கியது. தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு தற்போதே அனைத்துக் கட்சியினரும் தங்களது பிரச்சார வியூகத்தை அமைத்து களத்தில் குதித்து வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பல்வேறு ஊர்களுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து வருகிறார். கடந்த வருடம் செப்டம்பர் 27ம் தேதி கரூரில் நடத்திய பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். அதன் பிறகு கூட்டங்கள் எதிலும் பங்கேற்காமல் இருந்த அவர், கடந்த வருடம் டிசம்பர் 11ம் தேதி புதுச்சேரியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். கரூர் சம்பவத்துக்கு பின் தமிழ்நாட்டில் முதல் முறையாக ஈரோடு மாவட்டம், பெருந்துறை விஜயமங்கலம் சரளை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி டிசம்பர் 18ம் தேதி நடைபெற்றது. 

அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் 2வது முறையாக வேலூர் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் பிரச்சார பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்தார். பள்ளிகொண்டா அடுத்த சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஒடுகத்தூர் செல்லும் சாலையில் சுமார் எட்டு பேருக்கு சொந்தமான  25 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தினை தவெக கட்சியினர் தேர்வு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்நிலையில் விஜயின் வேலூர் மக்கள் சந்திப்பு கூட்டம் பிப். 2வது வாரத்தில் நடக்கவிருந்த நிலையில், பிப்ரவரி இறுதி வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.