கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு விஜய் நேரில் நன்றி
Updated: May 8, 2026, 19:32 IST1778248930254
ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக்கோரிய விஜய், நாளை காலை பதவியேற்க அனுமதிக்கோரினார். ஆளுநரை சந்தித்த உடனே, கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு சென்று தலைவர்களுக்கு நேரில் நன்றி செலுத்தினார்.

234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழகச் சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற பெரும்பான்மை என்ற எண்ணிக்கையை எட்ட, காங்கிரஸ் (5 இடங்கள்), இந்திய கம்யூனிஸ்ட் (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2) மற்றும் இந்திய முஸ்லீம் லீக் (2) உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தன. இதனையடுத்து ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக்கோரிய விஜய், நாளை காலை பதவியேற்க அனுமதிக்கோரினார். ஆளுநரை சந்தித்த உடனே, கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு சென்று தலைவர்களுக்கு நேரில் நன்றி செலுத்தினார்.

