அரசியல் கட்சியாக மாறும் விஜய் மக்கள் இயக்கம்- ஒரு மாதத்தில் தனித்து போட்டியா என அறிவிப்பு

 
ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்பி இணையத்தில் வைரல் 

விஜய் மக்கள் இயக்கம் வெகு விரைவில் அரசியல் கட்சியாக மாற இருப்பதாக நடிகர் விஜய், இயக்க நிர்வாகிகளிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில், விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை நடிகர் விஜய் இன்று சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலிருந்தும் 150-க்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மேலும் தொடர்ந்து 1 மணிநேரத்திற்கு மேலாக நிர்வாகிகளிடம் நடிகர் விஜய் ஆலோசனையை நடத்தியுள்ளார்.


இந்த கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் சில அறிவுறுத்தலும், கட்சி தொடங்குவது தொடர்பாக சில நம்பிக்கை வார்த்தைகளை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் இயக்கத்தின் அடித்தளத்தை, பூத்கமிட்டிகளை வலுப்படுத்த வேண்டும், தேர்தலை சந்திக்க எப்போது வேண்டுமானாலும் தயாராக இருக்கவேண்டும், மக்கள் பணிகளை மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டும், மக்கள் பணிகளை செய்ய தடை ஏற்பட்டால் உடனடியாக தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

இதுவரை இல்லாத வகையில் நடிகர் விஜய் அரசியல் குறித்து நிர்வாகிகளிடம் வெகு விரைவில் அரசியல் கட்சியாக மாற இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு மாதத்தில் முதலில் கட்சியை பதிவு செய்துவிட்டு தனித்துப் போட்டியா அல்லது பிறருக்கு ஆதரவா என முடிவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.