நல்லகண்ணு உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி

 
ஈஞா

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு தவெக தலைவர் விஜய் அஞ்சலி செலுத்தினார். 

சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான பாலன் இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல் வைக்கப்பட்டுள்ளது. தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி,விசிக தலைவர் திருமாவளவன், தமிழக பாஜக மாநில தலைவர் நயனார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர்  எல். முருகன், சத்யராஜ் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினர். அதன்பின் தவெக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.