அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய விஜய்: "மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம்" - விஜய் ட்வீட்..!

 
1

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சென்னையில் உள்ள பனையூர் உள்ள தவெக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அண்ணல் அம்பேத்கருக்கு புகழாரம் சூட்டி பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம்  சமத்துவம், சம உரிமை, சமூக நீதி, ஜனநாயகம் ஆகியவற்றை நிலைநிறுத்தியவர். வலுவான அடித்தளம் அமைத்து, எளியவர்களுக்கும் அதிகாரம் கிடைக்கப் பாடுபட்டவர். நம் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

நம் கொள்கைத் தலைவரின் பிறந்தநாளில், சமத்துவ சமுதாயம் அமைக்கும் லட்சியப் பாதையில் பயணிப்போம். மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம்.