பல லட்ச ரூபாய் சீட்டு பணத்தை ஏமாற்றிய விஜய் கட்சி நிர்வாகி!

 
பல லட்ச ரூபாய் சீட்டு பணத்தை ஏமாற்றிய விஜய் கட்சி நிர்வாகி! 

திருவண்ணாமலையில் பல லட்ச ரூபாய் சீட்டு பணத்தை ஏமாற்றிய விஜய் கட்சி நிர்வாகியின் வீட்டை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலையை சேர்ந்தவர் முருகன். விஜய் மக்கள் நிர்வாகியான இவர், ரூ.50 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை சீட்டு பெற்றுள்ளார். வட்டிக்கு ஆசைப்பட்டு அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் சீட்டு போட்டுள்ளனர். ஆனால் முருகன், பணத்தை ஏமாற்றிவிட்டு போக்கு காட்டுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கலெக்டர் மற்றும் போலீசிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த மக்கள், விஜய் கட்சி நிர்வாகி முருகனின் வீட்டை பத்து பூட்டுகளை போட்டு பூட்டினர்.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீசார், பெண்களை சமாதானம் செய்து அனுப்பிவிட்டு விசாரணை செய்துவருகின்றனர்.