விஜயவாடா உத்சவ் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய்!
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று ஆந்திரா விஜயவாடா சென்றார். கனக துர்கா அம்மன் கோயிலில் தரிசனமும் செய்தார். பின்னர் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு, கோதாவரி - கிருஷ்ணா - காவிரி நதிநீர் இணைப்பு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து விஜயவாடா உற்சவ் 2.0 கலை நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி கலைஞர்களின் நெகிழ்ச்சியான நடன நிகழ்வுகளை இரு முதல்வர்களும் பார்த்து ரசித்தனர். விஜயவாடா உத்சவ் நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் முதலமைச்சர் விஜய் நீண்ட நேரம் உரையாடினார். பின்னர் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.
ஆந்திர கலாச்சாரம், பாரம்பரியத்தை பறைசாற்றும் 'அமராவதி வைபவம்' விழாவிலும் முதல்வர் விஜய் பங்கேற்றார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றுள்ள விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் விஜய் கலந்து கொண்டுள்ளார்.

