4 அமைச்சர்கள் டெல்லி செல்ல விஜய் உத்தரவு..!

 
1

மத்திய அரசுடன் இணைந்து மீட்பு பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிக்கவும், மீட்கப்பட்டவர்கள் பாதுகாப்பு தமிழகம் திரும்புவதற்கு வழிவகை செய்யவும் 4 அமைச்சர்களை டெல்லி அனுப்ப முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் ஆதவ், ராஜ்மோகன், வினோத், தென்னரசு ஆகியோர் டெல்லி செல்ல உள்ளனர். அமைச்சர்கள் டெல்லி சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கண்காணிக்கவும், 4 அமைச்சர்களும் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

காத்மாண்டுவுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு:

இதனிடையே, நேபாளத்தில் நேரடியாக மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் வகையில் ஆஷிஷ் குமார் ஐ.ஏ.எஸ். தலைமையிலான அதிகாரிகள் குழுவை காத்மாண்டுவுக்கு அனுப்பவும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இந்தக் குழு நேபாளத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, தமிழர்களின் நிலை மற்றும் அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை கண்காணிக்க உள்ளது.

தூதரக அதிகாரிகளுடன் தொடர் ஒருங்கிணைப்பு:

ஏற்கனவே இந்திய தூதரக அதிகாரிகள் மூலமாக நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. டெல்லியில் உள்ள தமிழக அரசு அதிகாரிகளும் மீட்பு பணிகள் தொடர்பான விவரங்களை தொடர்ந்து ஒருங்கிணைத்து வருகின்றனர்.

நேபாளத்தில் சிக்கியுள்ள 103 தமிழர்களையும் பாதுகாப்பாக மீட்டு தமிழகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.