“அந்த மனசுதான் சார் கடவுள்”... செய்தியாளர்களுக்கு கூல் ட்ரிங்க்ஸ் கொடுத்த விஜய்
கொளுத்தும் வெயிலில் பணியாற்றிய செய்தியாளர்களுக்கு கூல் ட்ரிங்க்ஸ் கொடுத்து உதவினார் விஜய்.

புதுச்சேரிக்கான சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 9ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் புதுச்சேரிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் படையெடுத்து வருகின்றனர். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். புதுச்சேரி வந்த விஜய்க்கு அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி வரவேற்பு கொடுத்தனர். தொண்டர் ஒருவர், விஜய்க்கு வேல் ஒன்றை பரிசாக கொடுத்தார். அதனை அவர் அன்பாக வாங்கி கொண்டார்.
Unfortunately media won’t show this 😃 pic.twitter.com/9xU05wRWmK
— Vijay Fans Trends (@VijayFansTrends) April 4, 2026
இதனிடையே சாலையில் விஜய், பரப்புரை வாகனத்தில் வருவதை செய்தியாளர்கள் படம்பிடித்தப்படி வந்தனர். கொளுத்தும் வெயிலில் தனக்காக, தனது செய்திகளை ஒளிபரப்பும் வேலையை செய்த அந்த செய்தியாளர்களுக்கு கூல் ட்ரிங்க்ஸ் கொடுத்து உதவினார் விஜய். தனது வாகனத்தில் இருந்தபடி, ஜூஸ் பாட்டிலை எடுத்து அவர்களுக்கு வழங்கினார். விஜய் தற்செயலாக செய்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

