இன்று விஜய் நாகை, திருவாரூர் பயணம்: தி.மு.க. ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!

 
1 1

நாகை, திருவாரூரில் விஜய் இன்று (சனிக்கிழமை) பிரசாரம் மேற்கொள்ளும் நிலையில், அந்த இரு மாவட்டங்களிலும் தி.மு.க. ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், சாதனைகள் குறித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் செய்திருந்தனர். விஜய் வருகையையொட்டி இருமாவட்டங்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதே நேரத்தில் திருவாரூரில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் விஜயை வரவேற்று தவெக சார்பில் வைக்கப்பட்ட சுவரொட்டி மீது கருப்பு நிற போஸ்டர் மர்ம நபர்களால் ஒட்டப்பட்ட நிலையில், தவெகவினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தவெகவினருடன், காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு வருகிறார்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.