ஆளுநரிடம் 3 பக்க கோரிக்கை மனு அளித்த விஜய்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்,பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோர் சந்தித்து 3 பக்க கோரிக்கை மனுவை அளித்தனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநரும் அண்ணா பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவியை ராஜ்பவனில் நேரில் சந்தித்து மனு அளித்தார் த.வெ.க தலைவர் விஜய். மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு த.வெ.க தலைவர் விஜய், திருக்குறள் புத்தகத்தையும் வழங்கினார்.
ஆளுநருடன் சுமார் 15 நிமிடங்கள் சந்தித்த விஜய், டமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கைப் பாதுக்க வேண்டும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.