நீட் தேர்வை எதிர்க்கிறோம்! நிதி ஆயோக் கூட்டத்தில் கர்ஜித்த முதலமைச்சர் விஜய்
பிரதமர் மோடியை இரண்டாவது முறையாக தனியாக சந்தித்தார் முதலமைச்சர் விஜய்.
டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு முதல்வர் விஜய் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசி உள்ளார். அப்போது தமிழக நலன் குறித்த கோரிக்கையை பிரதமர் மோடியிடம் விஜய் வழங்கினார்.
முன்னதாக ஒன்றிய அரசுடன் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புடன் செயல்பட எங்கள் அரசு தொடர்ந்து உறுதி பூண்டுள்ளதாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்துவிட்டு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்வி சேர்க்கை வேண்டும், தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள ரூ.3,284 கோடி கல்வி நிதியை எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் இரண்டாவது எய்ம்ஸ் மருத்துவமனையாக கோவை மாவட்டத்தில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் எனவும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

