பெற்றோரை சந்தித்த விஜய்! சந்தோசத்தில் எஸ்.ஏ.சி

 
vijay

நடிகர் விஜய் கட்சி தொடங்கிய பின் முதன்முதலாக பெற்றோர்களை சந்தித்து ஆசிப்பெற்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.

Image

நடிகர் விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் வெளியில் சொல்லப்படாத பிரச்சனை இருந்தது நாம் அனைவருக்கும் தெரியும். இதனால் சில காலம் பெற்றோரை சந்திக்காமலேயே இருந்துவந்தார். அரசியலுக்கு வர வேண்டும் என அவரது தந்தை வற்புறுத்திய நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற  கட்சி அறிவிப்பை வெளியிட்டார் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வரும் விஜய், இதற்கிடையில் தனது பெற்றோரை சந்தித்துள்ளார்.


முன்னதாக நடிகர் விஜய் லியோ படத்தின் ரிலீஸிற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தனது தாய், தந்தையாரை சந்தித்து பேசினார். அப்போது எடுத்த புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர், அதில், ‘உறவும், பாசமும் மனித மனத்தின் மாமருந்து’ என்று குறிப்பிட்டிருந்தார்.