பரபரக்கும் அரசியல் களம் : சிவி சண்முகத்தை சந்திக்கும் விஜய்- எடப்பாடி பழனிசாமியையும் சந்திக்கிறார்..!!
தமிழக முதல்வராக பதவியேற்ற விஜய் அதே நாளில் சென்னை பெரியார் திடலுக்கு சென்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். பெரியார் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரையும் முதல்வர் விஜய் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ள அதிமுக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் அணியினரை இன்று பிற்பகல் 2 மணிக்கு முதல்வர் விஜய் சந்தித்து பேசுகிறார்.
இச்சந்திப்பைத் தொடர்ந்து முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து முதல்வர் விஜய் வாழ்த்துகளைப் பெற இருக்கிறார்..

