அன்புமணி இல்லத்திற்கு சென்று வாழ்த்து பெற்றார் விஜய்!
May 11, 2026, 17:08 IST1778499521862
மு.க.ஸ்டாலின், வைகோவை தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இல்லத்திற்கு சென்று வாழ்த்டு பெற்றார் விஜய்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் சந்திப்பை முடித்துவிட்டு தற்பொழுது பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாசை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் விஜய். நீலாங்கரையில் உள்ள அன்புமணி இல்லத்துக்கு சென்ற விஜய்யை, அன்புமணி மற்றும் அவரது மனைவி செளமியா வரவேற்றனர். பின்னர் இருவரும் பொன்னாடை போர்த்தி பரஸ்பரம் வாழ்த்துகளை தெரிவித்துகொண்டனர்.

