பிரேமலதாவுடன் நடிகர் விஜய் சந்திப்பு

 
பிரேமலதாவுடன் நடிகர் விஜய் சந்திப்பு

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை, நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் சந்தித்தார்.

Image

விஜயகாந்த் இல்லத்தில் இருக்கும் அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செய்து, பிரேமலதாவிடம் வாழ்த்துப் பெற்ற நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி. நடிகர் விஜய் நடிக்கும் 'கோட்' படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த் தோன்றுவதை, பிரேமலதாவிடம் காண்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் 5ம் தேதி‘தி கோட்’ படம் வெளியாக உள்ளது.

Image

இதனிடையே வரும் 22ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்ய உள்ள நிலையில் பிரேமலதா விஜயகாந்த்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் விஜய். இவர்களது சந்திப்பு அரசியல் ரீதியிலான சந்திப்பு அல்ல என்றும் தெரிகிறது.