ரூ.9000 கோடி கடன் பெற்று வெளிநாடு ஓடிய விஜய் மல்லையா மகனுக்கு கோலாகலமாக திருமணம்

 
விஜய் மல்லையா

ரூ. 9000 கோடி கடன் பெற்று தப்பியோடிய விஜய் மல்லையாவின் மகனுக்கு லண்டனில் திருமணம் நடைபெற்றது.

ரூ. 9000 கோடி கடன் பெற்று இந்தியாவிலிருந்து தப்பியோடிய மதுபான அதிபர் விஜய் மல்லையா, இங்கிலாந்தில் ஆடம்பரமாக வாழ்ந்துவருகிறார். 60 வயதான அவர் மீது கடன் மோசடி வழக்கை அமலாக்கத் துறையும் மற்றும் சிபிஐ தொடர்ந்துள்ளது. இந்நிலையில் லண்டனில் பதுங்கியுள்ள விஜய் மல்லையா  தப்பியோடிய விஜய் மல்லையாவின் மகனுக்கு லண்டனில் திருமணம் நடைபெற்றது. ஆடம்பரமாக நடைபெற்ற சித்தார்த் மல்லையாவின் திருமணத்தில் ஐபிஎல்-ல் மோசடி செய்த லலித் மோடி பங்கேற்றார். லலித் மோடி மீது வரி ஏய்ப்பு தொடர்பாக ரூ.700 கோடிக்கு மேலாக சட்ட விரோத பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளன. 

சித்தார்த்தா மல்லையா திருமணத்தில் விஜய் மல்லையாவும் லலித் மோடியும் பங்கேற்பு

இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களாக வலம் வந்த  விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகிய 3 பேரும்  தங்கள் நிறுவனங்கள் மூலம்  பொதுத்துறை வங்கிகளை ஏமாற்றி  கடன் பெற்று பல ஆயிடம் கோடி  நிதி மோசடியில் ஈடுபட்டனர்.  அதன்படி ரூ.22 ஆயிரத்து 585 கோடியே 83 லட்சம் மோசடி செய்து அரசுக்கு இழப்பினை ஏற்படுத்தி உள்ளனர். பின்னர் வெளிநாடுகளுக்குச் தப்பிச் சென்ற அவர்களை இந்தியா அழைத்து வர மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும், தற்போது வரை எதுவும் பலனளிக்கவில்லை. 3 பேருக்கு சொந்தமான  ரூ. 19,111  கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.