“காலை 10 மணிக்கு வர வேண்டும்”- அதிகாரிகளுக்கு விஜய் போட்ட அதிரடி உத்தரவு
May 19, 2026, 19:09 IST1779197985992
தலைமைச் செயலக ஊழியர்கள் காலை 10 மணிக்குள் பணிக்கு வர வேண்டும் என தலைமைச் செயலக பணியாளர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
தலைமை செயலகத்தில் பணியாற்றும் அரசுப் பணியாளர்கள் அனைவரும் சரியாக காலை 10 மணிக்கு பணிக்கு வர வேண்டும் என துறை வாரியாக வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் 40க்கும் மேற்பட்ட துறைகளில் 5,500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அரசு ஊழியர்களாகவும், ஒப்பந்த பணியாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். முதலமைச்சர் விஜய் காலை 9.30- 10 பணிக்குள் தலைமை செயலகம் வந்துவிடுவதால் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வருவது அவசியம் என உயரதிகாரிக அறிவுறுத்தியுள்ளனர்.

