#BREAKING “கரூர் துயர சம்பவத்திற்கு விஜய் மட்டுமே காரணம், சதியும் உள்நோக்கமும் இல்லை”- உண்மை கண்டறியும் குழு

 
#BREAKING “கரூர் துயர சம்பவத்திற்கு விஜய் மட்டுமே காரணம், சதியும் உள்நோக்கமும் இல்லை”- உண்மை கண்டறியும் குழு #BREAKING “கரூர் துயர சம்பவத்திற்கு விஜய் மட்டுமே காரணம், சதியும் உள்நோக்கமும் இல்லை”- உண்மை கண்டறியும் குழு

கரூர் துயர சம்பவத்திற்கு விஜய் தாமதமாக வந்ததே முக்கிய காரணம் - உண்மை கண்டறியும் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

கடந்த மாதம் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதிக் கூட்டியக்கம் சார்பில் கரூர் துயரம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், தொழிலாளர்கள், வழக்கறிஞர்கள், காவல்துறையினரை சந்தித்து பேராசிரியர் சரஸ்வதி தலைமையிலான குழு உண்மைகளை திரட்டி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “கரூர் துயர சம்பவத்திற்கு விஜய் தாமதமாக வந்ததே முக்கிய காரணம். கரூர் துயர சம்பவத்துக்கு யாருடைய சதியும், உள்நோக்கமும் காரணம் இல்லை. தவெக சார்பில் கூட்ட எண்ணிக்கையை கணிக்க முடியாததும் நெரிசலுக்கு முக்கிய காரணம். 27 ஆம் தேதி சனிக்கிழமை என்பதால் அந்த நேரத்தில் கூட்டம் அதிகமாக இருந்திருக்கிறது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் மக்கள் கூடியதால் நெரிசல் ஏற்பட்டது. கூட்டநெரிசலை கட்டுப்படுத்த தவெக எந்த ஏற்பாடும் செய்யவில்லை. கரூர் வந்ததும் பெரிய காலதாமதம் என்கின்றபோது, மக்கள் மன்றத்தில் விஜய் விளக்கவேண்டும். கூட்டம் காட்டும் எண்ணத்தில் நாமக்கல்லில் இருந்து கரூர் வரும் வழிகளில் விஜய் வாகனம் மெதுவாக இயக்கப்பட்டுள்ளது. 40 நிமிடங்களில் கடக்கூடிய நாமக்கல் - கரூர் புறவழிச்சாலையை விஜய் பல மணி நேரம் கடந்து பயணித்து வந்துள்ளார். நாமக்கல்லில் இருந்து கரூருக்கு விஜய் பல மணிநேர தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம். விஜய் பேச இருந்த இடத்துக்கு 50 மீட்டருக்கு முன்னரே காவல்துறை கூறியபடி,வாகனத்தை நிறுத்தி பேசியிருந்தால் நெரிசலை குறைத்திருக்கலாம். விஜயுடன் இருந்த பாதுகாவலர் ஒருவர் கூட்டநெரிசல் என எச்சரித்தும் அதை அலட்சியப்படுத்தி விஜய் தன் பேச்சை தொடர்ந்துள்ளார். விஜய்யின் செயல் மக்கள் மீது அவருக்கு இருந்த அக்கறையின்மை, பொறுப்பின்மையை காட்டுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.