CBI-யின் கேள்விகளால் திணறிய விஜய்..! விஜய் இடம் கேட்கப்பட்ட 10 கேள்விகள்..!
சி.பி.ஐ அதிகாரிகள் விஜயிடம் எழுத்துப்பூர்வமாக அனைத்து கேள்விகளையும் கேட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக கூட்டம் நடைபெற இருந்த இடத்திற்கு நீங்கள் ஏன் தாமதமாக வந்தீர்கள்?
நீங்கள் தாமதமாக வந்தது தான் கூட்ட நெரிசலுக்கு காரணமா?
மக்கள் மயங்கி விழுந்ததை பார்த்த பிறகும் நீங்கள் ஏன் பேசிக் கொண்டிருந்தீர்கள்?
நிலைமையை கட்டுப்படுத்த நீங்கள் செய்த முயற்சிகள் என்ன?
கூட்டம் அதிகமாக கூடும் என்று தெரிந்தும் நீங்கள் என்ன மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டீர்கள்?
விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா? அந்த சமயத்தில் நடந்தது என்ன? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் விஜயிடம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
விசாரணை முடிந்தபின் விஜய் சிபிஐ அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார்.விசாரணையை முடித்துக்கொண்டு விஜய் தில்லியிலுள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று அவர் சென்னைக்குத் திரும்புவார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


