விஜய் வெறும் சினிமா நடிகர் அவ்வளவுதான்! - நயினார் நாகேந்திரனின் அதிரடிப் பேச்சு

 
Nainar

 தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி;

இன்னும் இரண்டு தினங்களில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடாமல் திருமாவளவன் விலகி உள்ளார். இதன் மூலம் அந்த கூட்டணியில் சலசலப்பு இருந்து கொண்டு இருக்கிறது. காங்கிரசும் ஏற்கனவே பெரிய சலசலப்புக்கு மத்தியில் தான் கூட்டணியில் சேர்ந்தனர்.மாணிக்கம் தாகூர் ஒரு பக்கம், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விருப்பமில்லாமல் இருந்தது போல் திருமாவளவன் விவகாரம், அவர்களின் கூட்டணியில் சலசலப்பு உள்ளதை காட்டுகிறது. திமுக தேர்தல் அறிக்கை ஒரு ஜீரோ அறிக்கை.

தமிழகம் முழுக்க கஞ்சா பழக்கத்தை, உற்பத்தியை உருவாக்கிய கட்சி திமுக.சொத்துவரி, மின்கட்டணம் உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தேர்தல் அறிக்கை என எல்லாமே பொய்யான வாக்குறுதிகளை தான் சொல்லி உள்ளனர். 5 ஆண்டு காலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. வரும் 23ம் தேதி அதற்கான பதில்கள் வெளிவரும். பிரதமர் மோடி கன்னியாகுமரி, கோவைக்கு வர உள்ளார். கூட்டத்திற்கும், ஓட்டுக்கும் சம்பந்தம் இல்லை.

விஜய் ஒரு சினிமா நடிகர். அவ்வளவுதான்.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.