மாணவர்களுக்கு ஊக்கத்தொகை - 10 நிமிடங்கள் உரையாற்றும் விஜய்

 
vijay

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க நடிகர் விஜய் முடிவு எடுத்துள்ளார்.  இதன் காரணமாக அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு நடிகரும்,  தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் நாளை ஊக்கத்தொகை வழங்குகிறார்.

vijay

 தமிழக வெற்றி கழகம் சார்பில் நாளை நடைபெறும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.  சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில்,  தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி  ஆனந்த் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டார். 

FF

இந்நிலையில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் நடிகர் விஜய் 10 நிமிடங்கள் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சி தொடங்கிய பின் முதல்முறையாக ஊக்கத்தொகை வழங்க உள்ளதால் அரசியல் கருத்துக்கள் இதில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதே விழாவில் காமராஜர், அம்பேத்கர், பெரியார் பற்றி படியுங்கள் என நடிகர் விஜய் அறிவுறுத்தி இருந்தார்.  அத்துடன் பணம்  வாங்காமல் வாக்களியுங்கள் என பெற்றோருக்கு வலியுறுத்த மாணவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.