விஜய்க்கு தலைமைத்துவ பண்பே இல்லை - ஐகோர்ட் நீதிபதி காட்டம்
பெண்கள், குழந்தைகள் பலியான நிலையில், கட்சி தொண்டர்களை, ரசிகர்களை பொறுப்பற்ற முறையில் கைவிட்டு ஓடிய தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தலைமை பண்பே இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 7 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், “கரூர் சம்பவம் நடைபெற்றதும் மற்ற கட்சியினர் உதவிக்கு விரைந்தபோது தவெக நிர்வாகிகள் காணாமல் போனது ஏன்? பரப்புரை ஏற்பாட்டாளர்கள், தலைவர் என அனைவரும் சம்பவம் நடந்ததும் தொண்டர்களையும், அவர்களை பின் தொடர்பவர்களையும் கைவிட்டு அங்கிருந்து மறைந்துவிட்டனர். சம்பவத்துக்கு பொறுப்பேற்கவும் இல்லை. பெண்கள், குழந்தைகள் பலியான நிலையில், கட்சி தொண்டர்களை, ரசிகர்களை பொறுப்பற்ற முறையில் கைவிட்டு ஓடிய தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தலைமை பண்பே இல்லை.
கரூரில் நடந்த சம்பவம் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு (MAN MADE DISASTER) நிகழ்ந்துள்ளது. கரூர் சம்பவத்தின் வீடியோக்கள் பார்க்கும் போது வேதனை அளிக்கிறது. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம், அரசு அமைதியாக இருக்க முடியாது. ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் என அனைவரும் வருத்தம் தெரிவித்து, அனைத்து கட்சிகளும் மீட்பு பணியில் இருந்தனர். நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் மட்டுமின்றி தலைவர் முதல் அனைவரும் சம்பவம் இடத்தில் இருந்து மறைந்து விட்டனர். மக்களை, குழந்தைகளை மீட்டிருக்க வேண்டும். அதை செய்யாமல், சம்பவத்துக்கு பொறுப்பேற்காத தவெக செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

