திருமாவளவன், சீமானுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து!!

 
n

விசிக , நாம் தமிழர் கட்சிகளுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

tn
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூகவலைத்தள பக்கத்தில், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.