முதல்வர் விஜய்க்கு Z+ பாதுகாப்பு! என்ன சிறப்பு?
முதல்வர் விஜய்க்கு Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் எஸ்பிஜி பாதுகாப்புக்கு அடுத்த உயர்ந்த பாதுகாப்பு நிலைதான் “Z+ Security”. மாநில முதல்வர்கள், முக்கிய மத்திய அமைச்சர்கள், உயிர் அச்சுறுத்தல் உள்ள VIP-க்கள் மட்டுமே இந்த பாதுகாப்பைப் பெறுவர். 24 மணி நேரமும் 55-க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்புப் படை
வீரர்கள் பாதுகாப்பில் இருப்பார்கள். NSG கமாண்டோக்கள், CRPF, CISF உள்ளிட்ட ஆயுதப்படை பிரிவுகள் இணைந்து பாதுகாப்பு வளையம் அமைப்பார்கள். MP5 போன்ற அதிநவீன ஆயுதங்களுடன் கமாண்டோக்கள் எப்போதும் பாதுகாப்பில் இருப்பார்கள்.
குறைந்தது 5 Bulletproof வாகனங்கள் கொண்ட பாதுகாப்பு கான்வாய் பயன்படுத்தப்படும். பாதுகாப்பில் உள்ள நபரின் பயண திட்டம், சந்திப்பு, நிகழ்ச்சி அனைத்தும் முன்கூட்டியே Security Wing-க்கு தெரிவிக்க வேண்டும்.
செல்லும் Route, Timing, Meeting உள்ளிட்ட அனைத்தும் பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிப்படியே நடைபெறும். VIP-ஜ சந்திக்க வருபவர்கள் யாராக இருந்தாலும் முழு சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். கான்வாய் செல்லும் போது முதல் மற்றும் கடைசி பாதுகாப்பு வாகனங்களுக்கு இடையில் வேறு எந்த வாகனத்தையும் அனுமதிக்க மாட்டார்கள்.

