தவெக எம்.எல்.ஏக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விஜய்!

 
s

சட்டமன்றத்திற்கு முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கார் மற்றும் உதவியாளர் வழங்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளார்.

சட்​டப்​பேரவை பட்​ஜெட் கூட்​டத்​தொடரில் பேசிய விசிக எம்​எல்ஏ ஜோதி​மணி, ‘ “எம்​எல்​ஏக்​கள் மக்​கள் பணி செய்ய வாக​னம், தனி உதவி​யாளர் போன்ற வசதி​களை அரசு செய்​துதர வேண்​டும்’’ என்று கோரிக்கை வைத்​தார். அதற்கு பதிலளித்த பேர​வைத் தலை​வர் ஜேசிடி பிர​பாகர், ‘‘எம்​எல்​ஏக்​கள், முன்​னாள் எம்​எல்​ஏக்​கள் தரப்​பில் பல்​வேறு கோரிக்​கைகள் வந்​துள்​ளன. அவற்றை முதல்​வரின் கவனத்​துக்கு கொண்டு செல்​கிறேன். அவர் உரிய நடவடிக்கை எடுப்​பார்” எனக் கூறினார்.

இந்நிலையில் எம்​எல்ஏ ஜோதி​மணி​யின் கோரிக்கையை நிறைவேற்ற முடிவு செய்துள்ள முதல்வர் விஜய், லஞ்​சம், ஊழலற்ற நிர்​வாகத்தை உறு​தி​செய்ய சட்​டப்​பேர​வைக்கு முதல்​முறை​யாகத் தேர்​வாகியுள்ள  எம்​எல்​ஏக்​களுக்கு கார் மற்​றும் உதவி​யாளர்​ வழங்க ஒப்​புதல் வழங்கியுள்ளார். நடப்பு கூட்​டத்​தொடரிலேயே இதற்​கான அறி​விப்பு வெளி​யாகும் எனக் கூறப்படுகிறது.