விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு! வெறும் அறிவிப்பு மட்டும்தானா?

 
விஜய்

தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அறிவித்திருந்தாலும், அதற்கான ரிவியூ மீட்டிங் இன்னும் தொடங்கப்படாமல் இருப்பதால் தற்போது வரை பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

Actor-politician Vijay's party rejects 'baseless' rumours of alliance with  AIADMK

SPG, Z+, Z, Y+, Y, X ஆகிய பிரிவு பாதுகாப்பு அறிவித்த பின்பு, மத்திய அரசின் Security Review Committee (SRC) ஆலோசனை கூட்டம் நடைபெறும்.  எந்தெந்த மாநில அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதோ? அந்தந்த மாநில டிஜிபி, உளவுத்துறை அதிகாரி, தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளோடு இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்கும். இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும். அண்மையில் தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான ரிவியூ மீட்டிங் இன்னும் தொடங்கப்படாமல் இருப்பதால் தற்போது வரை பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில், அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு துபாய் நிறுவனத்தை சேர்ந்த பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது.