துபாய் பறந்த விஜய் - வைரல் வீடியோ!!

 
tnt

நடிகர் விஜய் திரைத்துறை மட்டுமல்லாது தற்போது அரசியலிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். தொடர்ந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வரும் அவர் , இடையே இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.  இப்படத்தில் நடிகர்கள் பிரசாந்த், மோகன், பிரபுதேவா ,ஜெயராம், கணேஷ், யோகி பாபு, அஜ்மல்,  சினேகா, லைலா , மீனாட்சி சவுத்ரி  ஏராளமானோர்  நடிக்கின்றனர்.  ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.  இந்த படத்தில் நடிகர் விஜய் இரண்டு வேடங்களில் நடித்த வருகிறார்.  இப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Goat poster collage


இந்நிலையில்  GOAT படப்பிடிப்பிற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து நடிகர் விஜய் துபாய் புறப்பட்டு சென்றார்.  நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் கடந்த 19ஆம் தேதி சென்னை திரும்பிய நிலையில் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக துபாய் புறப்பட்டுள்ளார் இதற்கான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
 


https://twitter.com/singlecva/status/1789143295777808744


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தின் பல காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.