அனைத்து குடும்பங்களிடமும் வீடியோ காலில் பேசி முடித்தார் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த அனைத்து குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலமாக பேசி முடித்தார்.

இந்த துயர சம்பவத்தில் மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் தாய் உள்ளிட்டவர்கள் உயிரிழந்தனர். அந்த அனைத்து குடும்பமும் வீடியோ கால் மூலமாக இரங்கல் தெரிவித்து, உங்களுடன் துணை நிற்பேன், நேரில் வந்து சந்திப்பதாக கூறியிருக்கிறார் விஜய்.
நேற்று முந்தினம் முதல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் விஜய் பேசி வந்தார். மாநில நிர்வாகிகள் அருண்ராஜ், விஜயலட்சுமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் செந்தில்நாதன், பாலமுருகன் ஆகியோர் பாதிப்படைந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் சென்றனர். அவர்களின் மொபைல் மூலமாக விஜய் ஒவ்வொரு குடும்பத்தினரிடம் பேசி வந்தார். இந்த நிலையில் தற்போது அனைத்து குடும்பங்களிடமும் வீடியோ காலில் பேசி முடித்தார்.


