பெரம்பூரில் திருத்தப்பட்ட வேட்புமனு விஜய் சார்பில் தாக்கல்

 
பெரம்பூரில் திருத்தப்பட்ட வேட்புமனு விஜய் சார்பில் தாக்கல்

பெரம்பூரில் திருத்தப்பட்ட வேட்புமனு விஜய் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக அறிவித்த தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார். நேற்று திருச்சி பாலக்கரை பகுதியியிலுள்ள மாநகராட்சி 2-ஆவது மண்டல அலுவலகத்தில் திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விஜய் வழங்கினார். இந்நிலையில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட மனுதாக்கல் செய்த தவெக தலைவர் விஜய், இரு மனுக்களிலும் வயதை வெவ்வேறாக குறிப்பிட்டிருப்பதால் குழப்பம் நிலவுகிறது. பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த மனுவில் தனது வயதை 52 என குறிப்பிட்டிருந்த விஜய், 3 நாட்களுக்குப் பின் திருச்சியில் தாக்கல் செய்த மனுவில் தனது வயதை 51 என குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே ஒரு மனுவில் தன் மீது வழக்கு ஏதும் இல்லை எனவும், ஒரு மனுவில் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் விஜய் குறிப்பிட்டிருந்தது பேசுபொருளானது.

இந்நிலையில் பெரம்பலூரில் திருச்சி கிழக்கு தொகுதியிலும், விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில் முரணான தகவல்கள் இருந்தது சர்ச்சையான நிலையில், பெரம்பூரில் திருத்தப்பட்ட வேட்புமனு விஜய் சார்பில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. விஜய் சார்பில் தவெக மாவட்ட செயலாளர் சிவா, புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் பெரம்பூர் வேட்பு மனு தாக்கலில் 2025 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் பதிவு செய்யப்பட்ட FIR தகவல் குறிப்பிடப்படாமல் இருந்ததை தற்போது கூடுதல் பிரமாணப் பத்திரத்திரமாக தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் கொளத்தூரில் பதிவு செய்யப்பட்ட FIR விபரமும் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் வயது தொடர்பாக இருந்த மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் மதுரை வழக்கு மற்றும் கொளத்தூர் வழக்கு ஆகியவை சேர்க்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இந்த இரண்டு வழக்குகளையும் தற்போது கூடுதல் பிரமாண பத்திரமாக பெரம்பூர் தொகுதிக்கும் தாக்கல் செய்துள்ளனர்.