விசில் கோலம் போட்ட விஜய்
Apr 17, 2026, 18:47 IST1776431869309
பெரம்பூர் தேர்தல் பணிமனைக்கு சர்ப்ரைஸ் விசிட் செய்த விஜய், அங்கிருந்த பெண்மணியின் கோரிக்கையை ஏற்று விசில் கோலம் போட்டார்.
தவெக தலைவர் விஜய் தான் போட்டியிடும் சென்னை பெரம்பூர் தொகுதியில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் விசில் கோலம் போட்டு விசில் சின்னத்தை கோலமாக வரைந்து பொதுமக்களிடம் விஜய் வாக்கு சேகரித்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில், த.வெ.க. தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளுக்கு கூடுதல் ஸ்பெஷலாக மாதம் ஒருமுறை வருவேன், மக்கள் என்னை சுலபமாக சந்திக்கலாம் என விஜய் கூறியிருந்தார்.


