முதல்வர் விஜய்யை சந்தித்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் அவரது மனைவி ராஷ்மிகா மந்தனா முதலமைச்சர் விஜய்யை சந்தித்தனர்.
தென்னிந்தியத் திரைப்படத் துறையின் பிரபல நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவரும் கடந்த பிப்ரவரி 26, 2026 அன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் தெலுங்கு மற்றும் கொடவா (Kodava) ஆகிய இரு பாரம்பரிய கலாச்சாரங்களின்படி நடைபெற்றது. ராகுல் சங்கிருத்யன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள 'ரணபாலி' திரைப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சென்னை வந்த நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் அவரது மனைவி ராஷ்மிகா மந்தனா முதலமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் விஜய் முதலமைச்சரானதற்கு பல்வேறு நடிகர், நடிகைகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நிலையில், இன்று இந்த ஜோடி வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடதக்கது.
After such a long time went to meet @actorvijay sir. ❤️😁
— Rashmika Mandanna (@iamRashmika) October 12, 2026
From fangirling him for longer than I can remember to having the opportunity to work with sir to today admiring him for the Chief Minister he is!
His journey is nothing short of incredible! 🔥❤️
Biggest love and best… pic.twitter.com/uIed4ECSxo
விஜயுடனான சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராஷ்மிகா மந்தனா, “முதலமைச்சர் விஜய்யை இவ்வளவு நீண்ட காலத்திற்குப் பிறகு சந்திக்கச் சென்றேன். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அவரை ஒரு தீவிர ரசிகையாக ரசித்ததில் இருந்து, அவருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது வரை, இன்று அவர் ஒரு முதலமைச்சர் என்பதை உணர்ந்து அவரைப் புகழ்வது வரை! அவருடைய பயணம் உண்மையிலேயே வியக்கத்தக்கது! உங்களுக்கு என் மிகப்பெரிய அன்பும், நல்வாழ்த்துக்களும் எப்போதும் உண்டு!” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

