தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா..!
‘ரணபலி’ திரைப்படத்தின் புரொமோஷன் பணிகளுக்காக சென்னை வந்துள்ள நட்சத்திரத் தம்பதிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா, தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள இத்திரைப்படம் வரும் 16-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினருடன் இணைந்து சென்னையில் தீவிர விளம்பரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சந்திப்பு சினிமா வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
விஜய் உடன் வாரிசு படத்தில் நாயகியாக நடித்தவர் ராஷ்மிகா என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் தேவரகொண்டா வெளியிட்ட பதிவில், "அன்பிற்குரிய விஜய் சாருடன் அழகான ஒரு தருணம். அவரது வேலைக்கு இடையே எங்களை மிகுந்த அன்போடு வரவேற்று வாழ்க்கை, பணி உள்ளிட்ட தனது தனிப்பட்ட பார்வைகளைப் பகிர்ந்து கொண்டார். ஒரே ஒரு சந்திப்பிலேயே எனக்கு மிகவும் பிடித்தமான ஒருவராகிவிட்டார்"" என குறிப்பிட்டுள்ளார்.
Had the most beautiful time with the dearest Thalapathy @actorvijay Sir. Even after a long day he received us with so much love and shared such personal insights into life, work and the world. One meeting and sir is already a favourite ❤️ Until next time, My love and respect. Vijay Deverakonda :)
— Vijay Deverakonda (@TheDeverakonda) October 12, 2026