வைகோவுக்கு சிறப்பு பதவி கொடுக்க விஜய் முடிவு

 
வைகோவுக்கு சிறப்பு பதவி கொடுக்க விஜய் முடிவு

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நியமிக்க தமிழக முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

டெல்லியில் இருந்துகொண்டு தமிழக அரசின் முக்கியக் கோரிக்கைகளை மத்திய அரசிடம் கொண்டு சேர்ப்பதும், மாநிலத்திற்கான நிதி மற்றும் திட்டங்களை மத்திய அரசிடமிருந்து முறைப்படிப் பெற்றுத் தருவதுமே இந்தச் சிறப்புப் பிரதிநிதியின் முதன்மையான மற்றும் முக்கியப் பொறுப்பாகும். டெல்லி அரசியலிலும் மத்திய தலைவர்களிடமும் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட மூத்த தலைவரான வைகோவின் இந்த நியமனம், மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவில் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.