#BREAKING சங்கீதாவை விவாகரத்து செய்ய விஜய் முடிவு- ரூ.35 கோடி செட்டில்மெண்ட்
மனைவி சங்கீதாவிற்கு விவாகரத்து அளிக்க தவெக தலைவர் விஜய் முடிவு என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனைவி சங்கீதாவிற்கு விவாகரத்து அளிக்க தவெக தலைவர் விஜய் முடிவு என தகவல்கள் தெரிவிக்கின்றன.நாளை விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், பரஸ்பரமாக பிரிவது தொடர்பாக சென்னையில் நேற்று இருதரப்பு வழக்கறிஞர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மும்பையில் இருந்து வந்த இரு தரப்புக்கும் நெருக்கமான ஜோசியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. வேட்புமனுவில் விஜய் தெரிவித்துள்ள சொத்து பட்டியலின் அடிப்படையில் பரஸ்பர விவாகரத்திற்காக ரூ.250 கோடி செட்டில்மெண்ட் தரவேண்டும் எனவும், மகன், மகளுக்கும் செட்டில்மெண்ட் தொகை தர வேண்டும் எனவும் சங்கீதா கேட்டதாக கூறப்படுகிறது. மனைவிக்கு மட்டும் ரூ.35 கோடி செட்டில்மெண்ட் அளிப்பதாகவும், மகன், மகளை தான் பார்த்து கொள்வதாக விஜய் ஒத்துக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


