மதுரை வடக்கு தொகுதியில் விஜய் போட்டி?

 
விஜய்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதி முழுவதும் த.வெ.க. நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அன்றைய தினத்தில் இருந்தே அவரது நகர்வுகள் தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரித்தது. ஒரு புறம் தான் திட்டமிட்டிருந்த படங்களிலும் மறுபுறம் கட்சியின் செயல்பாடுகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வந்தார். குறிப்பாக இரண்டு கோடி உறுப்பினர்கள் இலக்கு, தொகுதிவாரியாக நிர்வாகிகள் நியமிப்பது, கட்சியின் கொடி, முதல் மாநில மாநாடு ஆகிய பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.   

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழ்கம் கட்சியின் முதல் மாநாடு வருகிற அக்டோபர் 27ம் தேதி நடைபெற இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் அன்றைய தினம் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல்  தொண்டர்களுக்கும் பல்வேறு அறிவுறுத்தல்களை கட்சித் தலைமை வழங்கி வருகிறது.

Image

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதி முழுவதும் த.வெ.க. நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை வரவேற்கும் விதமாக இப்போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.