டெல்லி திரும்பிய கையோடு மூத்த நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை
Mar 16, 2026, 19:12 IST1773668532402
சென்னை தேனாம்பேட்டையில் தவெக தலைவர் விஜய், மூத்த நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.

சிபிஐ விசாரணைக்காக டெல்லி சென்று திரும்பிய கையோடு மூத்த நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை, தவெக தலைவர் விஜய் திடீர் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார். சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்திவருகிறார். வேட்பாளர் அறிவிப்பு, சுற்றுப்பயணம், தேர்தல் அறிக்கை உள்ளிட்டவை குறித்து விஜய் ஆலோசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தவெகவை என்டிஏ கூட்டணிக்கு இழுக்க முயற்சிப்பதாக கூறப்படும் நிலையில், விஜய் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

