விரைவில் நாம் சந்திப்போம்! - நடிகர் விஜய் ட்வீட்!!

 
vijay

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

school

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில்  91.55% தேர்ச்சி பெற்றுள்ளனர்.  மாணவர்கள் 88.58%, மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.53% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் 5.95% அதிகமாக உள்ளது.  தேர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை அரியலூர்  மாவட்டம்   97.31%  தேர்ச்சி விகிதம் பெற்று  முதலிடத்தில் உள்ளது.

null
இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள்.

விரைவில் நாம் சந்திப்போம்! என்று குறிப்பிட்டுள்ளார்.